Hai friends,
I need your valuable comments, how to develop this blog successively

Tuesday, March 16, 2010

Tamil lyrics-Ilayanila pozhikirathe from payanangal mudivathillai

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே.

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே!

விழாக் கானுமே, வானமே!


இளைய நிலா பொழிகிறதே…

இதயம் வரை நனைகிறதே………….


வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா

தினம் நனையும், முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்.

வான வீதியில் மேக ஊர்வலம்

காணும் போதிலே ஆறுதல் தரும்.

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்.


இளைய நிலா பொழிகிறதே…

இதயம் வரை நனைகிறதே…………


முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள்

தொலைத்தனவோ, முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ.

நீல வானிலே வெள்ளி ஓடைகள்

ஓடுகின்றதே என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்


இளைய நிலா பொழிகிறதே…

இதயம் வரை நனைகிறதே…………

Saturday, March 13, 2010

Tamil lyrics-poongathave thazhthiravai-Nizhalgal

பூங்கதவே தாழ் திறவாய்,
பூங்கதவே தாழ் திறவாய்,
பூவாய் பெண் பாவாய்,
பொன்மாலை சூடிடும் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்,

நீரோட்டம் போலோடும் ஆசை கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூபாலம்
காதல் தெய்வம்தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்

பூங்கதவே தாழ் திறவாய்,
பூவாய் பெண் பாவாய்,

திருத்தேகம் எனக்காகும்,
தேனில் நனைத்தது என்னுள்ளம்
பொன்னாதம் பூவாடை
ஆடும் காரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்.

பூங்கதவே தாழ் திறவாய்,
பூவாய் பெண் பாவாய்

பூவாய் ம்ம்ம்ம்,பெண் பாவாய் ம்ம்ம்

Friday, March 12, 2010

Tamil lyrics-Mazhai peyyum Podhu lyrics from renigunta (tamil)

மழை பெய்யும் போது நனையாத யோகம்
இது என்ன மாயம் யார் செய்ததோ..
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம் யார் சொல்வதோ.

இது மின்னலா இல்லை தென்றலா
அறியாமலே அலைபாயுதே.
இது வண்ணமா இல்லை வன்மமா
விளங்காமலே விளையாடுதே.

மழை பெய்யும் போது நனையாத யோகம்
இது என்ன மாயம் யார் செய்ததோ..

சில நேரம் மயிலிரஹால் வருடி விடும் புனிதமிது
சில நேரம் ரகசியமாய் திருடி விடும் கொடுமை இது.
மூடாமல் கண்கள் இரண்டும் தண்டோரா போடும்.
பேசாமல் மௌனம் வந்து ஆராரோ பாடும்
பகலிலே தாயை போல தாலாட்டும் காதலே
இரவிலே பேயை போல தலை காட்டும் காதலே.

மழை பெய்யும் போது நனையாத யோகம்
இது என்ன மாயம் யார் செய்ததோ..

தொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இது முடிவதில்லை.
விலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய் தெரிவதில்லை.
கொல்லாமல் கொல்லும் இது ஊர்கோல சைவம்.
சொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம்.
உடையுதே ஏதோ ஓன்று அது தான் காதலே.
உடையுலே உயிரும் சேர்ந்து அது தான் காதலே.

மழை பெய்யும் போது நனையாத யோகம்
இது என்ன மாயம் யார் செய்ததோ……
இது மின்னலா இல்லை தென்றலா
அறியாமலே அலைபாயுதே.
இது வண்ணமா இல்லை வன்மமா
விளங்காமலே விளையாடுதே....